உளுந்தூர்பேட்டை அருகே கோயிலின் பூட்டை உடைத்து பூஜை பொருள்களை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை இரவு திருடிச் சென்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே அரசூரில் யோக ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கோயில் இரும்புக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 4 கலசங்கள், 2 குத்துவிளக்கு, 2 பாத்திரங்கள் உள்ளிட்ட பூஜை பொருள்களை திருடிச் சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.20 ஆயிரம்.
இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய் நல்லூர் போலீஸார் கோயிலுக்கு வந்து விசாரித்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.