காணை, அனந்தபுரம் காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட 3 போலீஸார் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், காணை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்த்தசாரதி, தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் மணல் கடத்தலுக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விசாரித்தார். இதைத் தொடர்ந்து, பார்த்தசாரதி உள்ளிட்ட இரு போலீஸாரையும் விழுப்புரம் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இதேபோல, அனந்தபுரம் காவல் உதவி ஆய்வாளர் ஏழுமலை, பணியில் மெத்தனமாக இருந்ததாக எழுந்த புகாரின்பேரில் விழுப்புரம் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.