விழுப்புரம்

அவலூர்பேட்டையில் சிறப்பு குறைதீர் முகாம்

28th Aug 2019 08:51 AM

ADVERTISEMENT

மேல்மலையனூர் வட்டம், அவலூர்பேட்டை கிராம நிர்வாக அலுவலகத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகன் நாதன், வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணி, உதவி வேளாண்மை அலுவலர் ஷைலா, சுகாதாரத் துறை ஆய்வாளர் ஆறுமுகம், அவலூர்பேட்டை ஊராட்சிச் செயலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
முகாமில், பட்டா மாற்றம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவை கோரி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமாரிடம் மனுக்களை அளித்தனர்.  திருவள்ளுவர் சிலை அமைக்க இடம் கோரி அவலூர்பேட்டை தமிழ்ச்சங்கத்தினரும், நீர்மராமத்துப் பணிகள் மூலம் பெத்தான்குளத்தில் கழிவு நீர் கலப்பதை தடுக்கக் கோரி இயற்கை விவசாயிகள் சங்கத்தினரும் மனுக்களை அளித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT