கள்ளக்குறிச்சி நகராட்சி மக்களுக்கான சிறப்பு குறைதீர் திட்ட முகாம், சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் 12,13,14,15 ஆகிய வார்டுகளுக்குள்பட்ட அண்ணாநகர், ஏமப்பேர் காலனி, சேலம் நெடுஞ்சாலை, ஏமப்பேர் பள்ளிக்கூட சாலை, கரியப்பா நகர் ஆகிய பகுதி மக்கள் பங்கேற்றனர். முகாமுக்கு நகர அமைப்பாளர் க.குணசேகரன் தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர்(பொ) ம.செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
முகாமில் அதில் வருவாய்த் துறை உதவிகள் கோரி 40 மனுக்களும், சமூக பாதுகாப்புத் திட்டம் கோரி 15, குடிநீர், சாலை வசதி கோரி 22, இதர மனுக்கள் 3 என மொத்தம் 80 மனுக்கள் வரப் பெற்றன. முகாமில் வருவாய் உதவியாளர்கள் சி.முருகன், க.ராஜீ,
ஜி.சரண்யா, கிலடாரோஷிணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.