விழுப்புரம்

புதிய நுழைவு வாயில் திறப்பு

23rd Aug 2019 09:47 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நுழைவு வாயிலை அமைச்சர் சி.வி.சண்முகம் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.18 லட்சத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சுற்றுச்
சுவர் மற்றும் நுழைவு வாயில் கட்டப்பட்டது. 
இதற்கான திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நுழைவு வாயிலை திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வழங்கப்பட்ட 4 புதிய பேருந்துகளை அமைச்சர் சி.வி.சண்முகம் புதிய வழித்தடங்களில் இயக்கி வைத்தார். 
இவற்றில் விழுப்புரம் - திருச்சி வழித்தடத்தில் 3 புதிய பேருந்துகளும்,  விழுப்புரம் வழியாக புதுச்சேரி- சேலம் மார்க்கத்தில் ஒரு புதிய பேருந்தும் இயக்கி வைக்கப்பட்டன.
 விழாவில், மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார், எம்எல்ஏ எம்.சக்கரபாணி, மாவட்ட வருவாய் அலுவலர் க.சரஸ்வதி,  திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன், ஆவின் தலைவர் பேட்டை முருகன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜி.பாஸ்கரன், அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முத்துகிருஷ்ணன், பொது மேலாளர் வெங்கடேசன், துணை மேலாளர் குணசேகரன், கோட்டாட்சியர் ராஜேந்திரன்,  வட்டாட்சியர் பிரபு வெங்கேடேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT