விழுப்புரம்

தியாகதுருகம் எழுத்தாளருக்கு சிறுகதைச் செம்மல் விருது

23rd Aug 2019 09:46 AM

ADVERTISEMENT

சென்னையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய திருவள்ளுவர் விழாவில், விழுப்புரம் மாவட்ட எழுத்தாளர் தர்ஷிணிமாயாவுக்கு சிறுகதைச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
 சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் கவியரங்கம், நூல்கள்கள் வெளியீடு, பாராட்டரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. விழாவில்,  தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்று, பல்வேறு எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு, விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.  இந்த விழாவில், விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தர்ஷிணிமாயா எழுதிய, "மாயப்பயணம்' என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட அமைச்சர் க.பாண்டியராஜன், தர்ஷிணிமாயாவுக்கு சிறுகதைச்செம்மல் விருது வழங்கி பாராட்டினார். விழாவில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோஷம், மருது அழகுராஜ், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து, தமிழியக்கத்தின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் மாதவ.சின்ராஜ், சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் பாவரசு.பாரதிசுகுமாரன் ஆகியோர் எழுத்தாளர்களை வாழ்த்திப் பேசினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT