விழுப்புரம்

மேல்மலையனூர் கோயிலில் சமபந்தி விருந்து

16th Aug 2019 09:27 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சமபந்தி விருந்து வியாழக்கிழமை நடைபெற்றது.
மேல்மலையனூர் கோயில் வளாகத்தில் உள்ள தமிழக அரசின் அன்னதானக் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் பொதுமக்களுடன் சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார்.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கே.ராமு, கோயில்  அறங்காவலர்கள் செல்வம், ரமேஷ், ஏழுமலை, கணேசன், பெருமாள், சேகர், சரவணன், மேலாளர் மணி மற்றும் சதீஷ், மாவட்ட திமுக தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மொக்தியார் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு கோயில் 
சார்பில் சேலைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT