விழுப்புரம்

கைலாசநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து

16th Aug 2019 09:24 AM

ADVERTISEMENT

விழுப்புரத்தில் சுதந்திர தினத்தையொட்டி கைலாசநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் பொது விருந்து நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கைலாசநாதர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில்,  மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று வழிபட்டனர்.  
 இதனையடுத்து,  கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் ஆட்சியர் பங்கேற்று உணவு அருந்தினார்.  
விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சி.ஜோதி, விழுப்புரம் வட்டாட்சியர் பிரபுவெங்கடேஸ்வரன்,  செயல் அலுவலர் பூ.ஜெயக்
குமார்,  தக்கார் ஆய்வர் ஆர்.செல்வராஜ், அழகிரி உள்ளிட்ட அலுவலர்களும்,  பொது மக்கள் பலரும் சமபந்தி பொது விருந்தில் 
பங்கேற்றனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT