கள்ளக்குறிச்சியை அடுத்த க.மாமனந்தல் சாலையில் உள்ள அர்ரஹ்மானியா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு, குடிநீர் சிக்கனம் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள பயணியர் விடுதி எதிரே தொடங்கிய பேரணியை கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் ந.ராமநாதன் கொடியசைத்து தொடக்கி வைத்துப் பேரணியில் பங்கேற்றார். கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் தங்க.விஜயகுமார் முன்னிலை வகித்தார். பள்ளியின் நிர்வாகி முகமது ஆரிப் வரவேற்றார்.
மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் மழைநீர் சேகரிப்பு, குடிநீர் சிக்கனம் குறித்த வாசகங்கள் கொண்ட பதாகைகளை கைகளில் ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியபடி சென்றனர்.