விழுப்புரம்

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க வட்டப் பேரவைக் கூட்டம்

11th Aug 2019 03:18 AM

ADVERTISEMENT


தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில், புதிதாகத் தொடங்கப்பட்ட சின்னசேலம் வட்ட சங்கக் கொடியேற்று விழா, பெயர்ப் பலகை திறப்பு விழா, புதிய வட்ட நிர்வாகிகள் தேர்வு ஆகியவை அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் இரா.இளையராஜா தலைமை வகித்தார். வட்டச் செயலர் செந்தில், வட்டத் துணைத் தலைவர் மணி, செயற்குழு உறுப்பினர் தனவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலர் க.பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
சங்கத்தின் மூத்த உறுப்பினர் த.ராஜராஜன் சங்கக் கொடியேற்றினார். மாவட்டத் தலைவர் சி.கணேஷ் சங்கப் பெயர்ப் பலகை கல்வெட்டைத் திறந்து வைத்தார். சங்க தகவல் பலகையை சங்க மூத்த உறுப்பினர் க.வெங்கடசன் திறந்து வைத்தார்.
சங்கத்தின் மாவட்டச் செயலர் சு.சங்கரலிங்கம், மத்தியச் செயற்குழு உறுப்பினர் இரா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாகப் பிரித்து அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி, சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டப் பொருளாளர் அண்ணாமலை, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் பெரியாபிள்ளை, தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு மாவட்டச் செயலர் செந்தில்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்க வட்டப் பொருளாளர் தனசேகரன் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT