விழுப்புரம்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

11th Aug 2019 03:18 AM

ADVERTISEMENT


மயிலம் வட்டார வள மையத்தில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 7, 8-ஆம் வகுப்புகளுக்கான ஆங்கிலம், தமிழ் பாடங்களின் ஆசிரியர்களுக்கு புதிய பாட நுôல்கள் குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை வட்டார வள மைய மேற்பார்வையாளர் தட்சணாமூர்த்தி தொடக்கி வைத்தார். புதிய பாட புத்தகங்களின் அறிமுக பயிற்சி வகுப்பை கருத்தாளர்கள் கோபாலகண்ணன், ரேவதி, நவீன், தீப்பாஞ்சான் ஆகியோர் நடத்தினர். மயிலம் வட்டாரத்தில் பணியாற்றும் ஆங்கிலம், தமிழ் பாடங்களின் ஆசிரியர்கள் 62 பேர் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டனர். இவர்களுக்கு விளையாட்டு முறையில் கல்வி கற்பித்தல், வாழ்வியல் செய்முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT