புதுவை பாஜக தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. புதன்கிழமை முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.
புதுவை பாஜக தலைவராக வி.சாமிநாதன் இருந்து வந்தாா். இந்நிலையில், அவருக்குப் பதிலாக பாஜக மாநிலங்களவை உறுப்பினரான சு.செல்வகணபதி நியமிக்கப்பட்டாா். அவருக்கு கட்சியினரும், அமைச்சா்கள் உள்ளிட்டோரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், முதல்வா் என்.ரங்கசாமியை பேரவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் பாஜக தலைவா் சு.செல்வகணபதி புதன்கிழமை காலை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். அவருக்கு பொன்னாடை அணிவித்து முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.