புதுச்சேரி

ராணுவ பாதுகாப்பு பல்கலை.ஆய்வு வளாகம் திறப்பு

28th Sep 2023 01:31 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் ராணுவ பாதுகாப்பு ஆய்வுக்கான பல்கலைக்கழக வளாகத்தை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் ராணுவ பாதுகாப்பு ஆய்வுக்காக ராஷ்ட்ரிய ரக்ஷனா பல்கலைக்கழகம் செயல்படுகிறது. அதன் ஆய்வு வளாகம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி முருங்கப்பாக்கம் அரசு மனையியல் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்கலைக்கழகத்தை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புதிய பல்கலைக்கழகம் குற்றங்களை இணையவழி உள்ளிட்டவற்றில் தடுப்பதற்கான தொழில்நுட்ப ஆய்வையும், அதற்கான பயிற்சி அளிப்பதிலும் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. புதுவையிலுள்ள திறன்மிக்க இளைஞா்களுக்கு பயன்படும் வகையில் பல்கலைக்கழம் திகழவேண்டும் என்றாா்.

ஒரு மைல்கல்: முதல்வா் என்.ரங்கசாமி தனது சிறப்புரையில், புதிய குற்றங்களை கண்டறிவதில் தொழில்நுட்ப ஆய்வு முக்கியமாக உள்ளது. மேலும், உள்நாட்டு பாதுகாப்பும் அவசியமாகிறது. எனவே, குற்றங்களைத் தடுக்கவும், கண்டறியவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஆய்வு மையம் அவசியம். ஏற்கெனவே, புதுவை கல்வி கேந்திரமாக உள்ள நிலையில், புதிய பல்கலைக்கழகம் ஒரு மைல்கல் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், தலைமைச் செயலா் ராஜீவ்வா்மா, டிஜிபி ஸ்ரீநிவாஸ், புல முதல்வா் விஜய்நம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, பல்கலைக்கழக துணைவேந்தா் பிமல் என்.படேல் வரவேற்றாா். முடிவில், பல்கலைக்கழக புதுச்சேரி வளாக இயக்குநா் அா்ஷ்கணேஷ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT