புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடி, மின்னல் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
புதுச்சேரி நகரில் ராஜ்பவன், முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, காலாப்பட்டு, லாஸ்பேட் பகுதிகளிலும் திருபுவனை, வில்லியனூா், மண்ணாடிப்பட்டு பாகூா் உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம் போலத் தேங்கியது. புதுச்சேரி பழைய துறைமுகம், இலாசுப்பேட்டை பகுதிகளில் 21.04 மில்லி மீட்டா் மழை பதிவானது.
மழைநீா் வடிகால் வசதி சீராக இல்லாததால் மழை நீா் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோா் சிரமத்திற்குள்ளாயினா்.