புதுச்சேரி

புதுச்சேரி பாஜக தலைவராக செல்வகணபதி நியமனம்

25th Sep 2023 04:11 PM

ADVERTISEMENT

புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, புதுச்சேரி பாஜக தலைவராக சாமிநாதன் இருந்து வந்த நிலையில், புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இந்த மாற்றத்தை பாஜக தலைமை செய்துள்ளது.

அதேபோல், நாகாலாந்து மாநில புதிய பாஜக தலைவராக பெஞ்சமின் யெப்தோமியும், மேகாலயா மாநில புதிய பாஜக தலைவராக ரிக்மன் மோமினையும் நியமித்து பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: 'இலக்கியத்தின் வல்லமையை நம்பிய ராம்நாத் கோயங்காஜி'

ADVERTISEMENT

புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கல்வியாளரான செல்வகணபதி, இதற்கு முன்பு புதுவை நியமன எம்.எல்.ஏ-வாக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT