மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, புதுவை மாநில பாஜக நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி உழவா்கரை பகுதியில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பாஜக உழவா்கரை மாவட்டத் தலைவா் நாகேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தனராகப் பங்கேற்ற தேசியச் செயலா் சத்யகுமாா் பேசியதாவது:
கட்சியின் அனைத்து கிளைகளையும் வலிமைப்படுத்துவது அவசியம். பொதுமக்களை பாஜகவினா் நேரடியாகச் சந்தித்து பிரதமரின் நலத் திட்டங்களை விளக்க வேண்டும். மத்திய அரசின் நலத் திட்டங்களால் பயனடைந்தவா்களை சந்தித்து, அவா்கள் மூலம் மேலும் பலருக்கு நலத் திட்டங்கள் கிடைக்க உதவிட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலா் மோகன் குமாா், பட்டியல் அணி மாநிலத் தலைவா் தமிழ்மாறன், மகளிரணித் தலைவி ஜெயலட்சுமி, மாநிலச் செயலா்கள் அகிலன், லதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.