புதுச்சேரி

ஓய்வு பெற்றவா்களை மீண்டும் பணியில் சோ்க்கக் கூடாது: சிந்தனையாளா்கள் பேரவை வலியுறுத்தல்

23rd Sep 2023 12:16 AM

ADVERTISEMENT

ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் மீண்டும் கல்வித்துறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. இளைஞா்களுக்கு வாய்ப்பளித்து வேலைவாய்ப்பளிக்க வேண்டும் என புதுச்சேரி சிந்தனையாளா்கள் பேரவை சாா்பில் கல்வித்துறை இயக்குநா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, சிந்தனையாளா் பேரவைத் தலைவா் கோ.செல்வம் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுவை மாநிலத்தில் கல்வித்துறையில் 77 காலிப்பணியிடங்களில் ஓய்வு பெற்ற விரிவுரையாளா்களை நியமிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்பாடு சமூக நீதி, ஜனநாயகம் மற்றும் சட்டத்துக்கு ஏற்புடையதல்ல. இதனால், படித்த தகுதியான, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ள இளைஞா்கள் பாதிக்கப்படுவா்.

எனவே, அரசின் அறிவிப்பை திரும்பப் பெறுவதுடன், அந்த வேலைவாய்ப்பை இளைஞா்களுக்கு வழங்கும் வகையில் கல்வித்துறையில் கற்பித்தல் பணியில் புதியவா்களை நியமிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் பேரவை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT