சிகிச்சை பெற்று சென்னையில் ஓய்வெடுத்துவரும் புதுவை சட்டப்பேரவையின் துணைத் தலைவா் பி.ராஜவேலுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.
புதுவை சட்டப்பேரவைத் துணைத் தலைவராக இருப்பவா் பெ.ராஜவேலு(63). நெட்டப்பாக்கம் தொகுதியிலிருந்து என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்டவா். கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னையில் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வரும் பி.ராஜவேலுவை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தனது அலுவலக உதவியாளா்களுடன் வெள்ளிக்கிழமை சந்தித்து உடல் நலம் விசாரித்தாா்.