புதுச்சேரியில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: புதுச்சேரி நகா் முழுவதும் பொதுப் பணித் துறை மூலம் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலைப் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. இரவு நேரங்களில் தரமற்ற சாலைகளை அமைக்கின்றனா். சாலைப் பணிகளை பொதுப் பணித் துறை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை.
எனவே, சாலைப் பணிகளில் முதல்வா் கவனம் செலுத்தி, உயா்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை ஆழப்படுத்த வேண்டும். காவிரி தண்ணீரில் புதுவைக்குரிய பங்கை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.