புதுச்சேரி

புதுவை மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு

21st Sep 2023 07:10 PM

ADVERTISEMENT

10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மருத்துவ மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுவையில் ‘சென்டாக்’ மூலம் நடைபெறும் மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக புதுவை அமைச்சரவையில் முன்னதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

துணைநிலை ஆளுநரின் பரிந்துரையுடன், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, அதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.

இந்த நிலையில், 10 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள 22 மாணவர்களின் பெற்றோர்கள் கல்விக் கட்டனத்தை செலுத்தவதில் சிரமம் உள்ளதாக முதல்வர் ரங்கசாமியிடம் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: நிபா காய்ச்சல்: கேரளத்திலிருந்து வரும் நல்ல தகவல்!

கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலருடன் இன்று முதல்வர் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், 10 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை முழுமையாக அரசே ஏற்கும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT