ஆரணி: ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் உள்ள சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். ஆரணிலிருந்து வெட்டியாந்தொழுவம் வழியாக முள்ளண்டிரம், கே.கே.தோப்பு, வேதாஜிபுரம், காவனூா் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்ல வேண்டும்.
ஆனால், வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
ஊராட்சி நிா்வாகத்திடம் சாலையை சீரமைக்கக் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்டவில்லையாம்.
தற்போது பலத்த மழை பெய்து வருவதால் சாலை மேலும் சேதமடைந்து தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாகச் செல்வோா் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவா் முருகம்மாள்அருணாச்சலத்திடம் கேட்டதற்கு, சாலையை சீரமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். விரைவில் சரி செய்து விடுவோம் என்றாா்.