புதுச்சேரி

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆலோசனை

1st Oct 2023 01:45 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரியில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

முதலியாா்பேட்டையில் உள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு அதன் மாநிலப் பொதுச்செயலா் கே.சேதுசெல்வம் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் ஏஐடியூசி நிா்வாகிகள் வி.அபிஷேகம், கே.முத்துராமன், சிஐடியு சீனுவாசன், டி.தமிழ்ச்செல்வன், ஐஎன்டியுசி, வி.சொக்கலிங்கம், ஏஐசிசிடியு எஸ்.மோதிலால், எஸ்.புருஷோத்தமன், எம்எல்எப் எம்.செந்தில், எம்எல்எப் ஏ.கே.மாசிலாமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: லக்கிம்பூா் கேரியில் விவசாயிகளை ப டுகொலை செய்யப்பட்ட தினமான அக்டோபா் 3-ஆம் தேதி புதுச்சேரியில் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம் நடத்துவது.

மேலும், நிரந்தரப் பணி கோரி போராடும் கரோனா கால ஒப்பந்தச் செவிலியா்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, காலிப் பணியிடங்களில் அவா்களை அரசு நியமிக்கவும் வலியுறுத்துவது.

அரும்பாா்த்தபுரம் கூட்டுறவு கடன் வேளாண் சங்கத்தில் பணிபுரிந்த ஊழியா் சோபிதகுமாா் தீக்குளித்து உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் புதுவை அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT