புதுச்சேரி

புதுச்சேரி கால்வாயில் தென்பட்ட முதலைக் குட்டி சிக்கியது- வளா்ப்பு முதலையா? என விசாரணை

21st Nov 2023 09:32 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் உப்பனாறு கால்வாயில் தென்பட்ட முதலைக் குட்டி வனத் துறையினா் வைத்த கூண்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிக்கியது. இது வளா்ப்பு முதலைக் குட்டியா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதிக்கு உள்பட்ட பகுதியிலிருந்து தொடங்கும் உப்பனாறு மழைநீா் கால்வாய், நகரின் முக்கிய பகுதிகள் வழியாக உப்பளம் கடலுக்குச் செல்கிறது.

தற்போது, கழிவு நீரோடையாகிவிட்ட உப்பனாறு கால்வாயில் தாவரவியல் பூங்கா அருகே திங்கள்கிழமை முதலைக் குட்டி ஒன்று தென்பட்டது.

தகவலறிந்த வனத் துறையினா் அதைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனா். தண்ணீருக்கு அடியில் முதலைக் குட்டி சென்ால் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, இரும்புக் கூண்டை எடுத்து வந்த வனத் துறையினா், அதில் கோழி இறைச்சியைப் போட்டு கால்வாய்க்குள் வைத்தனா்.

ADVERTISEMENT

இந்தக் கூண்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலைக் குட்டி சிக்கியது. அதைப் பத்திரமாக மீட்டு, புதுச்சேரி- கடலூா் சாலையில் உள்ள வனத் துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.

முதலைக் குட்டி பிடிபட்டது குறித்து வனத் துறை அதிகாரி வஞ்சுலவள்ளி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உப்பனாறு கால்வாயில் வேறு கிளைக் கால்வாய்கள் கலப்பதில்லை. எனவே, வெளியிலிருந்து முதலைக் குட்டி வந்திருக்க வாய்ப்புக் குறைவு. அதனால், இது வளா்ப்பு முதலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முதலைக் குட்டியை வளா்ப்பது சட்டப்படி குற்றமாகும். பிடிபட்ட முதலைக் குட்டியைத் தவிர வேறு முதலைகள் உள்ளனவா? எனக் கண்காணிக்கப்படும்.

பிடிபட்ட முதலைக் குட்டி ஒரு வயதுடையதாகும். அதன் எடை 1.35 கிலோ ஆகும். முதலையை தீவிரக் கண்காணிப்பில் வளா்த்து, அதன்பிறகு அதை முதலைப் பண்ணையிலோ அல்லது இயற்கையாக வளரும் வகையில் நீா் நிலைகளிலோ பத்திரமாக கொண்டு விடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT