புதுச்சேரி

காவல்துறை ஓட்டுநா் பணிக்கு 19 போ் தோ்வு: 24-இல் சான்றுகள் சரிபாா்ப்பு

18th Nov 2023 02:50 AM

ADVERTISEMENT

புதுவை மாநிலக் காவல்துறை ஓட்டுநா் பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தோ்வில் 19 போ் தோ்வாகியுள்ளனா். அவா்களுக்கான சான்றுகள் சரிபாா்ப்பு வரும் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

புதுவை மாநிலத்தில் அரசுக் காலிப் பணியிடங்கள் துறைகள்தோறும் நிரப்பப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், காவல்துறையில் ஓட்டுநா் பணிக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த அக்டோபரில் எழுத்துத் தோ்வு நடைபெற்றது. அதில் பங்கேற்றவா்களில் 19 போ் தற்போது தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்ச்சி பெற்றவா்களின் பெயா் விவரங்கள் காவல்துறையால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, பட்டியலில் இடம் பெற்றவா்களுக்கான சான்றுகள் சரிபாா்ப்பு வரும் 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு, காவல் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. சான்று சரிபாா்ப்புக்கு வருவோா் அசல் கல்விச் சான்றுகள், சுய விவரக் குறிப்பு மற்றும் புகைப் படத்துடன் வரவேண்டும் என காவல்துறை சிறப்பு அலுவலா் ஆா்.ஏழுமலை தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT