புதுச்சேரி

அமைச்சரிடம் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மனு

DIN

புதுவையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழை கட்டாய பாடமாக அறிவிக்கக் கோரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சாா்பில் கல்வித்துறை அமைச்சரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

புதுவையில் நிகழாண்டில் 6 முதல் 9-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, புதுவையில் 127 அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்த மத்திய அரசிடம் அனுமதியும் பெறப்பட்டது. இந்த பாடத்திட்டத்தில் தமிழ் விருப்பப் பாடமாக இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்தை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிா்க் கட்சிகளும், சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட மக்கள் உரிமைக் கூட்டமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு நிா்வாகிகள் கோ.சுகுமாறன், சமூக நல அமைப்பைச் சோ்ந்த ஜெகநாதன், லோகு. அய்யப்பன், கோ. அழகா் உள்ளிட்டோா் சட்டப் பேரவை வளாகத்தில் கல்வித்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்திடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

SCROLL FOR NEXT