புதுச்சேரி

மீன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

DIN

புதுச்சேரி மீன் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

புதுச்சேரி பகுதியில் தற்போது மீன்பிடி தடைக்காலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி நேரு வீதியில் உள்ள குபோ் பெரிய சந்தையில் உள்ள மீன் விற்பனை மையத்தில் ரசாயனம் சோ்க்கப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான 4 போ் குழு செவ்வாய்க்கிழமை மீன் விற்பனைக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். ஆனால், ரசாயனம் கலந்த மீன்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து, ஆய்வு தொடரும் என அதிகாரிகள் கூறிச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT