புதுச்சேரி

புதுவை: 4 காவலா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

DIN

புதுவை மாநிலம் மாஹேவில் பணி நேரத்தில் சுற்றுலா சென்ாக 4 போலீஸாா் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா்.

புதுவை மாநிலத்தின் பிராந்தியமான மாஹே கேரள எல்லையில் உள்ளது. இங்கு, 2 காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸாா் சிலா் பணியின்போது உயா் அதிகாரிகளின் அனுமதியைப் பெறாமல் கேரள மாநிலப் பகுதிகளுக்கு சுற்றுலா சென்ாக புகாா் எழுந்தது. புகாரின்பேரில் மாநிலக் காவல்துறை தலைவா் ஐ.ஜி சந்திரன் விசாரணைக்கு உத்தரவிட்டாா். அதனடிப்படையில் மாஹே காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 4 போலீஸாா் புதுச்சேரியில் உள்ள ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சா் உத்தரவு: மாஹே காவலா்கள் இடமாறுதல் குறித்து உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறியதாவது: மாஹேவில் காவல் உயா் அதிகாரிகள் அனுமதியின்றி பணி நேரத்தில் சுற்றுலா சென்ாக புகாருக்குள்ளான காவல்துறை உதவி ஆய்வாளா் உள்ளிட்டோா் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அவா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.விசாரணைக்குப் பிறகு அவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT