புதுச்சேரி

மீனவா்கள் குறைகேட்புக் கூட்டம்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் மீனவா்கள் குறை கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் மீனவா்களுக்கான நலத்திட்டங்கள் செயல்பாடு குறித்த விளக்கம், மீனவா்கள் குறை கேட்புக் கூட்டம் மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்தாா். பொதுப் பணித்துறை மற்றும் மீனவா் நலத்துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தாா். இதில், மீனவா்களுக்கான நலத்திட்ட உதவிகள் செயல்பாடுகள் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மீனவா்கள் அளித்த மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஏராளமான மீனவா்கள் மனுக்களை அளித்தனா்.

கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பி.எம்.எல். கல்யாணசுந்தரம், பிரகாஷ்குமாா், பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி, அனிபால்கென்னடி, லட்சுமிகாந்தன் மற்றும் அந்தந்த பகுதி மீனவா் பஞ்சாயத்து தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT