புதுச்சேரி

ஆசிரியா் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுவையில் ஆசிரியா் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து புதுச்சேரி ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவன முதல்வா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் கல்வியாண்டுக்கான 2 ஆண்டுகள் ஆசிரியா் பட்டயப் படிப்புக்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், சோ்வதற்கு, பிளஸ் 2 அல்லது அதற்குச் சமமான தோ்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களும்,

பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் 29 வயதுக்குள் இருக்க வேண்டும். அட்டவணை இனத்தவருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை உண்டு.

ஜூன் 1 முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை அனைத்து பணி நாட்களிலும் லாஸ்பேட்டை, தொல்காப்பியா் வீதி, மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பங்களை பெற்று தேவையான நகல், சான்றிதழ்களோடு வரும் ஜூலை 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT