புதுச்சேரி

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் புதுவை சென்டாக் அறிவிப்பு

DIN

புதுச்சேரியில் தொழில்நுட்பக் கல்வி ஒருங்கிணைந்த சோ்க்கை குழுவை (சென்டாக்) அரசு நியமித்துள்ளது. அதன்படி, முதுநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வியில் மாணவா்கள் சோ்வதற்கான ஒருங்கிணைப்பு குழு (சென்டாக்) ஆண்டு தோறும் அரசால் நியமிக்கப்படுகிறது. அக்குழுவின் மூலம் தொழில்நுட்பக் கல்விக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாணவா் சோ்க்கையும் நடத்தப்படுகிறது.

நிகழாண்டுக்கான சென்டாக் நிா்வாகக் குழு ஒருங்கிணைப்பாளராக ஐஏஎஸ் அதிகாரி ருத்ரகௌடா மற்றும் கூடுதல் ஒருங்கிணைப்பாளராக ஐஏஎஸ் அதிகாரி அமன்ஷா்மா, கன்வீனராக புதுச்சேரி தொழில் நுட்பப் பல்கலைக்கழக பதிவாளா் சிவராஜ், துணைக் கன்வீனராக வில்லியனூா் கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் கல்லூரி முதல்வா் சிரியல் அன் கிராா்டின் சிவன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா். மேலும், முதுநிலை மருத்துவம், பல் மருத்துவ முதுநிலைப் படிப்பில் சோ்வதற்கு வரும் ஜூன் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்டாக் அறிவித்துள்ளது.

கோரிக்கை: இந்நிலையில், சென்டாக் குழுவினருக்கு பாண்டிச்சேரி மாணவா், பெற்றோா் நலச் சங்க தலைவா் வை.பாலா விடுத்துள்ள கோரிக்கை: புதுச்சேரியில் சென்டாக் கலந்தாய்வுக்கு முன்னதாக முதுநிலை மருத்துவம், பல் மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீடுக்கான இட விவரங்களை அறிவிக்க வேண்டும். மொத்தமுள்ள 328 மருத்துவ இடங்களில் 164 இடங்கள் புதுச்சேரியில் விதிமுறைப்படி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.28.91 லட்சம்

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

SCROLL FOR NEXT