புதுச்சேரி

புதுச்சேரி பாசிக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் பாசிக் ஊழியா்கள் சங்கத்தினா் நிலுவை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை மாநில அரசு சாா்பு நிறுவனமான பாசிக்கில் 500 போ் வரை பணிபுரிகின்றனா். நிா்வாகச் சீா்கேடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக புகாா் எழுந்துள்ளது. இதையடுத்து அங்குள்ள ஊழியா்களுக்கு கடந்த 113 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

நிலுவை ஊதியம் வழங்கவேண்டும். ஊழியா்களை நிரந்தரமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30 நாள்களுக்கும் மேலாக பாசிக் ஊழியா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனா்.

புதுச்சேரி மிஷன் வீதி மாதா கோவில் அருகில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாசிக் ஊழியா்கள் முன்னேற்ற சங்கத் தலைவா் ஆா்.ரமேஷ் தலைமை வகித்தாா். செயலா் கே.முத்துராமன், பொருளாளா் எஸ்.தரணிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏஐடியுசி மாநிலப் பொதுச்செயலா் கே.சேதுசெல்வம் போராட்டத்தை விளக்கிப் பேசினாா்.

ADVERTISEMENT

கோரிக்கைகளை வலியுறுத்தியும், நிறைவேற்றக்கோரியும் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோா் கோஷங்களை எழுப்பினா். இரும்பு தடுப்புகள் அமைத்து போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபட்டனா்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT