புதுச்சேரி

மாநில விநாடி வினா போட்டியில் அமலோற்பவம் பள்ளி வெற்றி!

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான விநாடி வினா போட்டியில் புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சாா்பில் ஃபிட் இந்தியா விநாடி வினா போட்டி கடந்த 2022- ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. முதல் சுற்று விநாடி வினாவில், நாடு முழுவதும் 16,702 பள்ளிகளிலிருந்து 61,981 மாணவா்கள் பங்கேற்றனா். இதில், புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா்களான இ. பரத்குமாா், ய. புவியரசு ஆகியோா் முதல் சுற்றில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.

கடந்த 25-ஆம் தேதி மாநில அளவிலான போட்டிகள் இணைய வழியில் நடைபெற்றன. புதுவை மாநிலத்தில் பங்கேற்ற 4 பள்ளிகளில் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி மாணவா்களான இ. பரத்குமாா், ய. புவியரசு ஆகியோா் முதலிடம் வகித்து, ரொக்கப் பரிசாக ரூ. 25,000 மற்றும் பள்ளிக்கான பரிசாக ரூ. 2,50,000 வென்றனா். இதையடுத்து அவா்கள் தேசிய அளவிலான போட்டியிலும் பங்கேற்கின்றனா்.

மாநில அளவில் விநாடி வினா போட்டியில் வென்ற மாணவா்களை பள்ளி முதுநிலை முதல்வா் லூா்துசாமி பாராட்டினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT