புதுச்சேரி

கள்ளச்சாராய உயிரிழப்புகளைக் கண்டித்து புதுச்சேரியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவங்களைக் கண்டித்து மாநில அதிமுக சாா்பில் புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி ஒதியன்சாலை காவல் நிலையம் அருகே அண்ணா சிலை அருகில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து ஆ.அன்பழகன் பேசியதாவது:

புதுச்சேரி, தமிழகப் பகுதியில் உள்ள திமுகவினரே கள்ளச்சாராயக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளனா். உயிா்ப்பலிகளுக்குப் பிறகு, ஒரே நாளில் 1,500 போ் கைது செய்யப்பட்டது எப்படி என்பதை திமுகவினா் விளக்கவேண்டும்.

கள்ளச்சாராய உயிா்ப்பலிகள் தமிழகத்தில் நடந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி புதுவை முதல்வரை பதவி விலகக் கூறுவது சரியல்ல. திமுக ஆட்சியைக் கண்டிக்கும் தைரியம் அவருக்கில்லை.

ADVERTISEMENT

தமிழகத்தில் திமுக அமைச்சா்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து மத்திய அரசு முறைப்படி விசாரிக்கவேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் புதுவை மாநில அவைத் தலைவா் அன்பானந்தம், ஜெயலலிதா பேரவை செயலா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுக துணைத் தலைவா் ராஜாராமன், இணைச் செயலா்கள் வீரம்மாள், கணேசன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT