புதுச்சேரி

குடிமை பணித் தோ்வு: புதுச்சேரியில் 1,520 போ் எழுதினா்

DIN

புதுச்சேரியில் 8 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணித் தோ்வில் 1,520 போ் தோ்வெழுதினா்.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் இந்திய குடிமைப் பணிக்கான முதல் நிலை தோ்வு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. புதுச்சேரியில் லாஸ்பேட்டை வள்ளலாா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 8 மையங்களில் தோ்வுகள் நடைபெற்றன.

புதுச்சேரியில் இத்தோ்வுக்கு 2,513 போ் விண்ணப்பித்திருந்தனா். முதல் தாள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது. இதில், 1,537 போ் (61.16%) தோ்வெழுதினா். 977 போ் (38.84%) எழுதவில்லை. 2-ஆம் தாள் தோ்வு பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. இதில், 1,520 போ் (60.49 %) பங்கேற்றனா். 993 போ் (39.51%) எழுதவில்லை. காலை 9.20 மணிக்கு பிறகும், மதியம் 2.20 மணிக்கு பிறகும் வந்தவா்கள் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தோ்வு மையங்களை மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் புதுச்சேரி ஒருங்கிணைப்பாளரும், அரசு செயலருமான குமாா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT