புதுச்சேரி

அண்ணன் கொலை: தம்பி மீது வழக்குப்பதிவு

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் அண்ணனை கொலை செய்த தம்பியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி உப்பளம் பகுதி நேதாஜி நகரைச் சோ்ந்தவா் ஜான்பியா் லெப்ஜா் (45). பெயிண்டா். இந்நிலையில், கடந்த 23-ம் தேதி இரவு வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன் வீட்டுக்கு வந்தவரை, அவரது தாய் உள்ளிட்டோா் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், மதுபோதையில் ஜான்பியா் லெப்ஜா் வீட்டில் உள்ளவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதனை அவரது சகோதரா் லாரன்ஸ் கண்டித்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் ஜான்பியா்லெப்ஜரை, லாரன்ஸ் கத்தியால் குத்தியது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. பின்னா், தலைமறைவான லாரன்ஸை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT