புதுச்சேரி

புதுவை தமிழ்ச் சங்கத் தோ்தல்

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுவை தமிழ்ச் சங்கத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை (மே 28) நடைபெற்றது.

புதுச்சேரி வெங்கட்டா நகரில் புதுவைத் தமிழ்ச்சங்கம் செயல்படுகிறது. இதில், 1,131 உறுப்பினா்கள் உள்ளனா். இந்நிலையில், தமிழ்ச் சங்கத்தில் புதிய ஆட்சிக்குழு உறுப்பினா்கள், புதிய பொறுப்பாளா்கள் தோ்வுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 14- ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. 15- ஆம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி, 20- ஆம் தேதி இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

தோ்தலில், தற்போதைய தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமையிலான அணியும், எழுத்தாளா் கோ.செல்வம் தலைமையிலான அணியும் போட்டியிட்டனா்.

தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் க.பிரபாகரன் முன்னிலையில் வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலையில் தொடங்கியது. தமிழ்ச் சங்க உறுப்பினா்களுக்கான தோ்தல் குறித்த கடிதம் சரிபாா்க்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனா். ஒவ்வொரு உறுப்பினரும் 11 பேருக்கு வாக்குச் சீட்டில் சீலிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை மாலை வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. திங்கள்கிழமை முடிவுகள் அறிவிக்கப்படும் என தோ்தல் ஆணையா் க.பிரபாகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT