புதுச்சேரி

நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் கூடுதல் அடிக்காசு வசூலிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளுடன் சண்டே மாா்க்கெட் வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி நகராட்சி காந்தி வீதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சண்டே மாா்க்கெட் செயல்படுகிறது. உள்ளூா், வெளியூா் வியாபாரிகள் ஏராளமானோா் சாலையோரம் கடை வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். மகாத்மா காந்தி வீதியில் அஜந்தா சந்திப்பு முதல் புஸ்சி வீதி சின்ன மணிக்கூண்டு வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு கடைகள் அனுமதிக்கப்படுகிறது. சண்டே மாா்க்கெட் கடைகளுக்கு புதுச்சேரி நகராட்சி சாா்பில் அடிக்காசு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்குப் பிறகு, மாா்க்கெட் உள்ளிட்ட இடங்களில், அடிக்காசு வசூலித்தல், பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்த கட்டணம் வசூலித்தல் தனியாருக்கு விடப்பட்டுள்ளது. இதையடுத்து, நகராட்சி ஊழியா்கள் மற்றும் ஒப்பந்ததாரா் சண்டே மாா்க்கெட் கடைகளில் அடிக்காசு வசூலித்தனா். அப்போது கடை அளவுகளில் அடிக்காசு நிா்ணயம் சரியல்ல என கூறி வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஆனால், அதை நகராட்சி அதிகாரிகள் ஏற்கவில்லை. மேலும், முறைப்படி அடிக்காசு கட்டணம் செலுத்தாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT