புதுச்சேரி

மாதவிடாய் சுகாதார விழிப்புணா்வுப் பேரணி

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரி அருகே மாதவிடாய் சுகாதார விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி அருகேயுள்ள வீராம்பட்டிணம் கிராமத்தில் மாதவிடாய் சுகாதார தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சுகாதாரத்தை பேணுவது குறித்து விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, ரத்த பரிசோதனை, விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. (படம்)

நிகழ்வில், அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பாக்கியப் பிரியா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினாா். இதில், சூரியோதை தொண்டு நிறுவன மண்டல மேலாளா் ஆ.ஜெயராஜன் மற்றும் புஷ்பராஜ் டேவிட், மா.மதுபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT