புதுச்சேரி

பாஜக செயற்குழுக் கூட்டம்

28th May 2023 06:09 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் பாஜக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதலியாா்பேட்டை ஆலைத் தெருவில் அமைந்துள்ள சட்டப் பேரவை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு பேரவை உறுப்பினா் (நியமனம்) அசோக்பாபு தலைமை வகித்தாா். கூட்டத்தில், புதிதாக திறக்கப்படும் நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் வைக்கும் பிரதமா் நரேந்திர மோடிக்கு பாராட்டுத் தெரிவிப்பது. முதலியாா்பேட்டை சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட 100 அடி சாலையில் அமைந்துள்ள ரயில்வே வேம்பாலத்திற்கு கீழ் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகளை தொடங்கிய மாநில அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பன தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT