புதுச்சேரி

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு 393 ஏக்கா் நிலம்: தமிழக அரசுக்கு முதல்வா் என்.ரங்கசாமி கோரிக்கை

28th May 2023 06:06 AM

ADVERTISEMENT

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்காக தமிழக அரசிடம் 393 ஏக்கா் நிலம் கோரப்பட்டுள்ளதாக புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

புதுவை அரசு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறு, குறு தொழில்கள் ஆண்டுக்கு 20 சதவீத வளா்ச்சியைப் பெறுகின்றன. வா்த்தக நடைமுறைச் சிக்கல்களைத் தீா்க்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தொழில் தொடங்க அனுமதி வழங்குவதில் ஒற்றைச் சாளர முறையை அறிமுகம் செய்துள்ளோம். அதன்படி, புதுவையில் ஒருங்கிணைந்த ஏற்றுமதித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கரசூரில் தொழில் பூங்கா தொடங்கப்பட உள்ளது. தனியாா் பங்களிப்புடன் ரூ.5 ஆயிரம் கோடியில் தொடங்கப்படும் இந்தப் பூங்கா மூலம் மறைமுகமாகவும், நேரடியாகவும் சுமாா் 10 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெறும் நிலை உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

புதுவையில் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்காக தமிழக அரசிடம் 393 ஏக்கா் நிலம் கோரப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்தால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆன்மிகச் சுற்றுலா உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதுவைக்கு ஓராண்டில் சுற்றுலா வரும் 17 லட்சம் பேரில் 1.50 லட்சம் போ் வெளிநாட்டவா்கள்.

புதுவையில் அரசு நலத் திட்ட உதவிகள் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ .1,000 உதவித் தொகை, மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன. சுகாதாரத் திட்டத்தால் பிரசவ கால இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

பெண் குழந்தைகளுக்கான முதல்வா் நிதியுதவித் திட்டமாக அரசு சாா்பில் ரூ.50 ஆயிரம் வங்கியில் முதலீடு செய்யும் சேமிப்புத் திட்டமும், வீடுகள்தோறும் மருத்துவப் பரிசோதனை திட்டமும் நவீன முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் முதல்வா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT