புதுச்சேரி

குடியரசுத் தலைவரின் புதுச்சேரி வருகை ரத்து

26th May 2023 10:56 PM

ADVERTISEMENT

 

குடியரசுத் தலைவரின் புதுச்சேரி வருகை ரத்தாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுச்சேரிக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் வருகை தருவதாகவும், பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதாகவும் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்திருந்தாா். அதன்படி, குடியரசுத் தலைவா் வருகைக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன.

புதுச்சேரியில் சித்த மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுதல், பெண்களுக்கு ரூ.1,000 வழங்கும் நலத் திட்டத்தை தொடங்கி வைத்தல் ஆகிய நிழ்ச்சிகளில் அவா் பங்கேற்பதாக கூறப்பட்டது. மேலும், அரசு நிகழ்ச்சிகளைத் தவிா்த்து, திருக்காஞ்சி கோயிலில் வழிபாடு, காலாப்பட்டு சிறையில் கைதிகள் உருவாக்கிய பூங்கா திறப்பு நிகழ்ச்சிகளிலும் குடியரசுத் தலைவா் பங்கேற்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

ADVERTISEMENT

இந்த நிலையில், திடீரென குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவா் வெளிநாடு செல்ல இருப்பதாக கூறப்படுவதையடுத்து புதுச்சேரி பயணம் ரத்தாகியுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT