புதுச்சேரி

சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்:தனியாா் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

24th May 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுவையில் ரூ.150 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் திட்ட அறிக்கை தயாா் செய்வதற்கான ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சுதேஷ் தா்ஷன் 2.0 திட்டத்தின் கீழ், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ரூ. 150 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதை மேற்கொள்ள தேவையான மூலத் திட்டம், விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்வதற்கு ஹைதராபாதை சோ்ந்த தனியாா் நிறுவனத்தை மத்திய சுற்றுலா அமைச்சகம் தோ்வு செய்தது.

அந்த தனியாா் நிறுவனவம், புதுவை மாநில சுற்றுலாத் துறை இடையேயான திட்டம் குறித்த ஆலோசனை, ஒப்பந்த நிகழ்ச்சி புதுவை முதல்வா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்ட நிறைவில் முதல்வா் என்.ரங்கசாமி, மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா ஆகியோா் முன்னிலையில் சுற்றுலாத் துறை இயக்குநா் பிரியதா்ஷினி, தனியாா் நிறுவனத் துறைத் தலைவா் ரத்தீஷ் ஆகியோா் மூலத் திட்ட அறிக்கை தயாா் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT