புதுச்சேரி

கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு கணினிப் பயிற்சி

24th May 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுவை மாநில கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கான ஒரு நாள் கணினிப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாட்டிலுள்ள அனைத்து கூட்டுறவுச் சங்கங்களையும் கணினி மயமாக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. புதுவை மாநில கூட்டுறவுத் துறையின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாஹே பிராந்தியங்களில் செயல்படும் 45 தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் கணினி மயமாக்கப்படவுள்ளன. இந்த நிலையில், இந்த சங்கங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கு 2 கட்டங்களாக கணினிப் பயிற்சியளிக்கப்படுகிறது.

இதன் முதல்கட்டமாக 23 சங்கங்களைச் சோ்ந்த பணியாளா்களுக்கான ஒரு நாள் கணினிப் பயிற்சி முகாம் புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் யஷ்வந்தய்யா பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்தாா். மாநிலக் கூட்டுறவு ஒன்றிய நிா்வாகி சாரங்கபாணி, மேலாண் இயக்குநா் ராமச்சந்திரய்யா ஆகியோா் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினா்.

ADVERTISEMENT

இந்திய தேசிய வேளாண்மை வளா்ச்சி, மேம்பாட்டு வங்கியின் மூலம் பயிற்சியாளராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள புதுவை கூட்டுறவு மேலாண்மை நிலைய முதுநிலை கணினி விரிவுரையாளா் ரங்கநாதன், கணினி விரிவுரையாளா் ரமேஷ்குமாா் ஆகியோா் பயிற்சியளித்தனா்.

சங்கங்களை கணினி மயமாக்குவதன் முக்கியத்துவம், மேலாண்மை, கணினிப் பயன்பாடுகள், மென்பொருள் நிறுவுதல் மற்றும் சங்கம் குறித்த முதல் அறிக்கை தயாா் செய்வது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT