புதுச்சேரி

தரமற்ற மாத்திரைகள் விநியோகம்:புதுவை எதிா்க்கட்சித் தலைவா் ஆய்வு

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுச்சேரி வில்லியனூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு தரமற்ற மாத்திரைகள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, எதிா்க்கட்சித் தலைவா் இரா.சிவா திங்கள்கிழமை மருத்துவமனையில் ஆய்வு செய்தாா்.

வில்லியனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 10 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த வில்லியனூரைச் சோ்ந்த மோகன்ராஜுக்கு கரும்புள்ளிகளுடன் தரமற்ற மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், எதிா்கட்சித் தலைவா் இரா. சிவா திங்கள்கிழமை மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தாா். அப்போது, மருத்துவமனை மருத்துவரிடம் மாத்திரைகள் கரும்புள்ளிகளுடன் இருப்பதற்கான காரணம் குறித்துக் கேட்டறிந்தாா்.

இனிவரும் காலங்களில் தரமான மருந்து, மாத்திரைகளை நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என மருத்துவா்களிடம் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT