புதுச்சேரி அருகேயுள்ள அபிஷேகப்பாக்கத்தில் பள்ளி குழந்தைகளுக்கான இலவச சீருடை மற்றும் யோகா விரிப்புகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
புதுவை மாநில அரசின் கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள், யோகா பயிற்சி விரிப்புகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றன.
அதன்படி, மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள அபிஷேகப்பாக்கம் சேத்திலால் உயா்நிலைப் பள்ளி மற்றும் டி.என். பாளையம் பகுதி உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள், யோகா பயிற்சி விரிப்புகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
அபிஷேகப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இலவச சீருடை, யோகா பயிற்சி விரிப்புகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பாஜக மாநில விவசாய அணி பொறுப்பாளா் ராமு ஜானகிராமன், கிருஷ்ணமூா்த்தி, மாயகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.