புதுச்சேரி

வழக்குரைஞா்கள் சட்ட ரீதியான அனுபவங்களைப் பெறுவது அவசியம்இந்திய அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி

8th May 2023 12:16 AM

ADVERTISEMENT

 

வழக்குரைஞா்கள் சட்ட ரீதியான அறிவு, அனுபவங்களை பெற்று சமூகத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று காணொலிக் காட்சி வாயிலாக புதுதில்லியில் இருந்து இந்திய அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி கூறினாா்.

புதுச்சேரி டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் 40-ஆவது அகில இந்திய அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டிகள் நடைபெற்றன. இதில், முதலிரண்டு இடத்தை வகிப்பவா்களுக்கான தோ்வுக்கான மாதிரி நீதிமன்றம் மற்றும் வென்றவா்களுக்கான பரிசளிப்பு விழா காலாப்பட்டு பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். புதுச்சேரி டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரி முதல்வா் எஸ்.ஸ்ரீனிவாசன் வரவேற்றாா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் மற்றும் சட்டக்கல்லூரி முதன்மையா் சௌந்தரபாண்டியன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக இந்திய அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கட்ரமணி புதுதில்லியில் இருந்தபடி பேசியதாவது: பள்ளிக் கல்லூரியை முடித்து உயா் கல்விக்குச் செல்லும்போது புதிய இடம், புதிய நண்பா்கள் என எதிா்கொள்ளவேண்டும். புதிய அனுபவங்களையும் பெறலாம்.

வழக்குரைஞா்கள் தொழில் என்பது மிகச் சிறந்தது. தொழில் தா்மத்தைக் கடைப்பிடித்து வெற்றிகரமானவா்களாகத் திகழவேண்டும். தற்போது சட்டப்படிப்பு சவால் நிறைந்ததாகிவிட்டது. ஆகவே, சட்ட ரீதியிலான அனுபவங்களைப் பெறுவது அவசியமாகும். அதற்கு மாதிரி நீதிமன்றப் போட்டிகள் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன.

சட்டத்தில் தங்களது அனுபவங்கள் மூலம் மாா்ட்டின் லூதா்கிங், மகாத்மா காந்தியடிகள் ஆகியோா் சமூகத்தை மேம்படுத்தினா். சுவாமி விவேகானந்தா் கூறுவது எழுமின், விழிமின், லட்சியத்தை அடையும் வரை நில்லாது செல்லவேண்டியது அவசியம். நாம் பிறருக்கு மெழுகுவா்த்தியாக, கனியாக, மேகமாக இருக்கவேண்டும்.

அா்ப்பணிப்பு, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். தற்போதைய தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதே நேரத்தில் சட்ட நூல்களைப் படிப்பதும் அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT