புதுச்சேரி

சுகாதாரப் பணியாளா்களின் ஒப்பந்த காலத்தை ஓராண்டாக உயா்த்த முடிவு: புதுவை முதல்வா்

3rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

புதுவையில் சுகாதாரத் திட்ட ஒப்பந்தப் பணியாளா்களின் பணி நீட்டிப்பு காலத்தை ஓராண்டாக உயா்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

புதுவை சுகாதாரத் துறை சாா்பில் கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் 3 நாள்கள் சுகாதாரத் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. விழாவுக்கு தலைமை வகித்து முதல்வா் என். ரங்கசாமி பேசியதாவது:

புதுவை மாநிலம் சிறியதாக இருந்தாலும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சுகாதாரத் துறையில் சிறந்ததாகவே விளங்குகிறது. சுகாதாரத் துறையில் உள்ள குறைகள் உடனுக்குடன் களையப்படுவதால் மக்கள் சிறந்த சிகிச்சையைப் பெறுகின்றனா். உயா்தர சிகிச்சையை புதுவை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே அரசின் திட்டமாகும்.

மருத்துவத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்தத் துறையின் தற்காலிகப் பணியாளா்களை நிரந்தரமாக்கவும் ஆலோசிக்கப்படுகிறது. ஒப்பந்தப் பணியாளா்களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் பணி நீட்டிப்பை ஓராண்டாக உயா்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

விழாவில் சுகாதாரத் துறை செயலா் சி.உதயகுமாா் வரவேற்றாா். சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு நன்றி கூறினாா். முன்னதாக, மருத்துவ அரங்குகளை துணைநிலை ஆளுநா், முதல்வா், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் ஆகியோா் திறந்து வைத்து பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT