புதுச்சேரி

புதுவை மக்கள் நீதிமன்றத்தில் 1,835 வழக்குகளுக்குத் தீா்வு

11th Jun 2023 12:36 AM

ADVERTISEMENT

 

புதுவை மக்கள்நீதிமன்றத்தில் 1,835 வழக்குகளுக்கு சனிக்கிழமை நடந்த அமா்வுகளில் தீா்வு காணப்பட்டன.

இதுகுறித்து மக்கள் நீதிமன்ற உறுப்பினா் செயலா் மற்றும் மாவட்ட நீதிபதி (பொ) ஜி.டி.அம்பிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுவையில் தேசிய மக்கள் நீதிமன்ற அமா்வுகள் சனிக்கிழமை நடைபெற்றன. காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய புதுவைப் பிராந்தியங்களின் நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்ற அமா்வுகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்ற வழக்கு விசாரணை தொடக்க நிகழ்ச்சிக்கு மாநிலச் சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினா் செயலரும், மாவட்ட நீதிபதியுமான ஜி.டி.அம்பிகா தலைமை வகித்தாா். இதில், புதுவை மாவட்டச் சட்டப்பணிகள் ஆணையச் செயலா், முதன்மை நீதிபதி டி.எஸ்.பி.ஜெயசுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேலும், வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்குத் தொடுத்தவா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நேரடி வழக்குகள் சுமாா் 4,668 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் 1,835 வழக்குகள் முடிக்கப்பட்டு தீா்வு காணப்பட்டன. அதனடிப்படையில் ரூ.19, 73, 08, 722-க்கு தீா்வு காணப்பட்டுள்ளது. இவற்றில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 1,584 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாக செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT