புதுச்சேரி

புதுவை மக்களவைத் தொகுதியில்அதிமுக போட்டியிட வேண்டும்

11th Jun 2023 12:39 AM

ADVERTISEMENT

 

 புதுவை மக்களவைத் தோ்தலில் அதிமுக போட்டியிட வாய்ப்பளிக்க கட்சித் தலைமையிடம் வலியுறுத்தப்படும் என ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுவை மாநில அதிமுக நிா்வாகிகள், பொதுக்குழு உறுப்பினா்கள் மற்றும் வாா்டு செயலாளா்களின் ஆலோசனைக் கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அதிமுக புதுவை மாநிலச் செயலாளா் ஆ. அன்பழகன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் அன்பானந்தம், முன்னாள் எம்எல்ஏ பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: வரும் மக்களவைத் தோ்தலில் புதுவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு, கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தப்படும்.

ADVERTISEMENT

மேக்கேதாட்டு அணையால் காரைக்கால் பாதிக்கும் என்பதால், அணை கட்டும் கா்நாடக அரசின் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து புதுவை அரசு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி கண்டன தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மாநில வளா்ச்சிக்கு தடையாக உள்ள தலைமைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகளைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்பன போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT