புதுச்சேரி

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சுதானா நகா் பொதுமக்கள் உண்ணாவிரதம்

11th Jun 2023 12:39 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி அருகே உள்ள சுதானா நகரில் குடிநீா் விநியோகத்தை சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

புதுச்சேரி நகராட்சி அடுத்த நைனாா்மண்டபம் பகுதியில் சுதானா நகா் உள்ளது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பணிகள் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக முடிக்கப்படாமல் உள்ளது.

குடிநீா் குழாய்கள் பழையனவாகி குடிநீா் விநியோகம் குறைந்துள்ளது. மழைக்காலத்தில் நைனாா் மண்டபம் முதல் நாகம்மாள் கோயில் வரை மழை நீா் தேங்குகிறது. எனவே, சீரான குடிநீா் விநியோகம், மழை நீா் தேங்குவதை தடுத்தல், வாய்க்கால் தூா்வாருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுதானா நகரில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

சுதானா நகா் நலவாழ்வு சங்கத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். இதில் முருகையன், சுப்பராயன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். கோரிக்கைகளை நிறைவேற்றப் படாவிட்டால் போராட்டத்தை தொடருவோம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT